செய்திகள்
வங்காளதேசத்தில் 9 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
வங்காளதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
டாக்கா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் வங்காளதேசம் தற்போது 31-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 8,364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.96 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 104 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 276 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 8.07 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.