செய்திகள்
ஜப்பானில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு
ஜப்பானில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.73 லட்சத்தை கடந்துள்ளது.
லண்டன்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய
உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 15,645 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், 15 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,255 ஆக உள்ளது. மேலும் 1.12 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.