உலகம்

ஆப்கானிஸ்தானில் சோகம்: இரு வேறு சாலை விபத்துகளில் 52 பேர் பலி

Published On 2024-12-19 21:34 GMT   |   Update On 2024-12-19 21:34 GMT
  • மத்திய ஆப்கானிஸ்தானில் இரு வேறு சாலை விபத்துகள் நடந்தன.
  • இந்த சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்:

மத்திய ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்துடன், எண்ணெய் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதியது.

இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்டன.

இந்த இரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 52 பேர் பலியாகினர். மேலும் 76 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பலர் காபூல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் டிரைவர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News