உலகம்

கொஞ்சம் விட்டா போதுமே.. செல்ஃபியை பதிவிட்ட இந்திய சி.இ.ஓ.வுக்கு மூஞ்சி காட்டிய Binance நிறுவனர்

Published On 2024-12-20 07:03 GMT   |   Update On 2024-12-20 07:03 GMT
  • கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம்
  • பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் கௌரி

கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனாவை சேர்ந்த சாங்பெங் சாவோ [Changpeng Zhao].

பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] ஆக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த  . இவர்கள் இருவரும் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது செல்பி எடுத்துள்ளனர்.

அதை பிரதிக் கௌரியின் 5ireChain நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த சாங்பெங் சாவோ, அனுமதி இல்லாமல் தனது புகைடபத்தை பகிர்ந்துகொண்டதற்காகப் பிரதிக் கௌரியை கடிந்துகொண்டார்.

என்னுடன் எடுத்த செல்பியை எப்படி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம், நாங்கள் பேசிக்கொள்ளக் கூட இல்லை, நிகழ்ச்சியில் வெறும் செல்பி மட்டும்தான் எடுத்துக்கொண்டோம் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.

இதனையடுத்து அந்த இடுக்கையை 5ireChain நிறுவனம் நீக்கி, எங்கள் நிறுவனர் & CEO பிரதிக் கௌரி மற்றும் Changpeng Zhao ஆகியோருக்கு இடையே எந்த ஒத்துழைப்பு அல்லது வணிக கூட்டணியையும் குறிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News