உயிரிழந்தவர்களுடன் டீ குடிக்க ஆசை.. அந்த 3 பேரின் பெயரை கூறிய அதிபர் புதின்
- வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
- கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
வலிமையான உலக தலைவர்களில் ஒருவராக ரஷிய அதிபர் புதின் கருதப்படுகிறார். இந்த வருடம் முடிவுக்கு வர இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வழக்கப்படி வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது வாழும் அல்லது உயிரிழந்த உலக தலைவர்கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த புதின், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஹெல்முட் கோல், முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் மற்றும் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகிய மறைந்த தலைவர்களுடன் தேநீர் அருந்த விரும்புவதாக புதின் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் -யிடம் இருந்து தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக புதின் அவரை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய புதின் ஆசியாவில், சீனா மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளதாக தெரிவித்தார் . இந்திய பிரதமருடன் எனக்கு மிகவும் அன்பான உறவு உள்ளது என்றும் புதின் குறிப்பிட்டார்.