உலகம்
வங்கதேசத்தில் திடீர் நிலச்சரிவு: 6 பேர் பரிதாப பலி
- வங்கதேசத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்து வருகிறது.
- இதனால் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள ஹதிகும்ருல்-14 ரோஹிங்கியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரோஹிங்கியா குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பல குடியிருப்புகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவை தொடர்ந்து ஆபத்தான மலைச்சரிவுகளில் வசித்து வருவர்களை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.