உலகம்

எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி

Published On 2024-12-30 21:00 GMT   |   Update On 2024-12-30 21:00 GMT
  • திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடிஸ் அபாபா:

எத்தியோப்பியா நாட்டின் கிராமப்பிற பகுதிகளில், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும், காலாச்சார ரீதியாக மக்கள் இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மோசமான சாலையும் விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News