உலகம்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடன் மோதல்: 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

Published On 2024-10-02 23:54 GMT   |   Update On 2024-10-02 23:54 GMT
  • ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.
  • நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது.

பெய்ரூட்:

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்தது.

நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.

லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்-இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள நீலக்கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் இருவேறு இடங்களில் நடந்த மோதலில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 8 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது 22 வயதான இளம் ராணுவ அதிகாரி உள்பட 8 வீரர்களை இழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News