உலகம்
null

வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- அதிரவைக்கும் வீடியோக்கள்

Published On 2024-12-17 08:18 IST   |   Update On 2024-12-17 17:20:00 IST
  • ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
  • பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News