null
வங்கதேச இந்துக்கள்.. உக்ரைன் பயணம் - ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
- வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம்
- இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சமீபத்தில் மேற்குகொண்ட ரஷிய-உக்ரைன் பயணம், வங்கதேச விவகாரம், இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருவரும் விரிவாக விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், அதிபர் ஜோ பைடனுடன் உரையாற்றினேன். உக்ரைனில் உள்ள நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினோம். அந்த பகுதிகளில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்று அவரிடம் தெரிவித்தேன். வங்கதேச நிலைமை குறித்து பேசியபோது, அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் , சிறுபான்மையினரின், முக்கியமாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதுதவிர்த்து க்வாட் கூட்டமைப்பு உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச அமைப்புகளில் இந்தியா-அமெரிக்கா தொடர்ந்து இணக்கமாக செயல்படுவது குறித்தும் பிரதமர் மோடி பைடனுடன் பேசியுள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.