உலகம்
அமெரிக்காவுடன் இணைய வேண்டும்- டிரம்ப் கருத்துக்கு கனடா பதிலடி
- ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதையடுத்து தனது கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
- அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் சமீபகாலமாக தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதையடுத்து தனது கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் டிரம்பின் கருத்துக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.
நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்றார்.
அதே போல் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, "அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்