126 பேரை பலிகொண்ட திபெத் நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன?
- அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
திபெத்தில் நேற்று [செவ்வாயன்று] எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டிங்ரி கவுண்டியில் காலை 6:35 மணிக்கு இமயமலைக்கு சுமார் 80 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சீன அதிகாரிகளால் 6.8 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் லாசா தொகுதியில் [Lhasa block] ஏற்பட்ட உடைவால் தூண்டப்பட்டது. இது குறிப்பிடத்தக்க டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியாகும்.
கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் வடிவத்தை தீர்மானித்து வரும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் தொடர்ச்சியான மோதல் காரணமாக இந்த பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் திபெத் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இங்கு 1950 இல் 8.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் திபெத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
டெக்டானிக் தகடுகள் அல்லது நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலின் அடிப்பகுதியும் பகுதியும் இணைந்த பாறைகளால் ஆனவை. புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டன.