இளவரசர் ஹாரியை நாடு கடத்துவீங்களா.. ஒரே போடுபோட்ட அதிபர் டிரம்ப் - என்ன சொன்னார் தெரியுமா?
- அதிபர் டிரம்ப் பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.
- மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன.
டியூக் ஆஃப் சசெக்ஸ் இளவரசர் ஹாரியின் குடியேற்ற நிலையை கேள்விக்கு உட்படுத்தும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இளவரசர் ஹாரியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்து இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹாரி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.
"நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். ஏற்கனவே அவரது மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவரது மனைவி மோசமானவர்," என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் பேசும்போது கூறினார்.
ஹாரியின் விசா விவகாரம் தொடர்பான சட்ட சிக்கல்கள், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு குறித்து விசா நடைமுறைகளின் போதே ஹாரி தகவல் தெரிவிக்க மறுத்தது தொடர்பாக ஹெரிடேஜ் பவுன்டேஷன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.