உண்மை முகம் வெளிவந்ததா? விஞ்ஞானிகள் உருவாக்கிய சாண்டா கிளாசின் படம் வெளியீடு
- சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ்.
- புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் சீசனில் இரவு நேரங்களில் சாண்டா கிளாஸ், குழந்தைகளுக்கு பல பரிசுகளை வழங்கி சுற்றி வருவதை காண முடியும்.
அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் உடல் அமைப்புடன் வசீகரமாக சாண்டா கிளாஸ் வலம் வருவார்.
கிறிஸ்தவ பிஷப்பான சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்க்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் பிறந்த இவர் மலைகளில் பனி நிறைந்த இடங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த புதிய ஆய்வில் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ் கூறுகையில், சாண்டா கிளாஸ் வலுவான மற்றும் மென்மையான முகம் கொண்டவர் என்பதை அவரது முக அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது 1823-ம் ஆண்டு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முகத்துடன் ஒத்துப்போகிறது என்றார். அடர்ந்த தாடியுடன் கூடிய சாண்டா கிளாசை பற்றி நினைக்கும் போது நம் மனதில் இருக்கும் உருவத்தை நினைவூட்டுகிறது என்றும் மோரேஸ் கூறினார்.
1950-ம் ஆண்டில் லூய்கி மார்டினோவோல் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தியும், மண்டை ஓட்டை 3-டியில் வரைந்தும் சாண்டா கிளாஸ் உருவத்தை வடிவமைத்ததாக கூறி உள்ளனர்.