உலகம்

பிலிப்பைன்சில் அதிகரிக்கும் வெப்பம்- அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு

Published On 2025-03-04 12:44 IST   |   Update On 2025-03-04 12:44:00 IST
  • பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
  • கடந்த ஆண்டும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடும் வெயில் சுட்டெரிப்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட அரசு பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஆண்டும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 242 மில்லியன் குழந்தைகளை கடும் வெப்பம் பாதித்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News