கமலா ஹாரிஸுடன் கைகுலுக்க மறுத்த செனட்டரின் கணவர்- வீடியோ
- பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்ப்-விடம் தோல்வியை தழுவினார். பலராலும் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் செனட்டர் டெப் பிஷ்ஷரின் கணவர் கமலா ஹாரிசுக்கு கை குலுக்க மறுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க செனட்டர்களின் பதவியேற்பு விழாவில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் பங்கேற்று இருந்தார். அப்போது, டெப் பிஷ்ஷர் அருகில் அவரது கணவர் பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.
அப்போது கமலா ஹாரிஸ் பக்கத்தில் நிற்பதற்கு தயங்குகிறார் பிஷ்ஷர். பின்னர் பதவியேற்பு முடிந்தவுடன் டெப் பிஷ்ஷர்-க்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் கமலா ஹாரிஸ் பின்னர் பிஷ்ஷரிடம் கை கொடுக்குகிறார். ஆனால் அவர் கை குலுக்க மறுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரிசின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.