உலகம்

ஜப்பானின் 102-வது பிரதமர் ஆனார் இஷிபா ஷிகெரு

Published On 2024-10-01 18:48 IST   |   Update On 2024-10-01 18:48:00 IST
  • விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.
  • லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக தேர்வு செய்தது.

ஜப்பானின் 102-வது பிரதமராக இஷிபா ஷிகெரு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கிஷிடா தனது அமைச்சரையுடன் ராஜினாமா செய்த நிலையில், ஜப்பான் பிரதமராக இஷிபா ஷிகெரு பதவியேற்றார். விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிஷிடா மற்றும் அவரது அமைச்சர்கள் பதவி விலகியதாக அமைச்சரவை செயலர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார் என்று ஜப்பான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஊழியர்கள் கிஷிடாவுக்கு கரகோஷம் எழுப்பி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஜப்பான் பிரதமராக இருந்த பியூமியோ கிஷிடா பதவி விலகியதை அடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்தது.

Tags:    

Similar News