உலகம் (World)

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்.. 29 பேர் பலி - நான்கே நாட்களில் 4 பள்ளிகள் அழித்தொழிப்பு

Published On 2024-07-10 01:36 GMT   |   Update On 2024-07-10 01:36 GMT
  • கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும்.
  • 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன'

பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று [ஜூலை 9] காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது  இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பள்ளி மீது குறிவைத்து இஸ்ரேல் ராணவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறனறனர். டாக்குதலில்போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளனர் 

கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும். இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன' என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பர் தெரிவித்துள்ளார்.

அல்- அவ்டா பள்ளிக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த்ததாகவும் அதனாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மத்திய காசாவின் நஸ்ரேத்தில் அமெரிக்கர்களால் நடத்தப்பட்ட அல்- ஜாவ்னி பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News