உலகம்

சிரியா மீது 'நிலநடுக்க குண்டு' வீசிய இஸ்ரேல்.. அதிர்ச்சி வீடியோ

Published On 2024-12-16 21:38 IST   |   Update On 2024-12-16 21:38:00 IST
  • சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
  • இஸ்ரேலின் தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News