உலகம்

முன்னாள் அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்

Published On 2024-09-17 21:17 GMT   |   Update On 2024-09-17 21:17 GMT
  • டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
  • டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

துப்பாக்கிச்சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபரான டிரம்பிடம் தொலைபேசியில் பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இது ஒரு சுமூகமான மற்றும் சுருக்கமான உரையாடலாக இருந்தது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News