உலகம்

கேளிக்கை நிகழ்ச்சியில் தலையில் பட்டாசு கொளுத்தியவர் பலி

Published On 2024-07-07 08:08 GMT   |   Update On 2024-07-07 08:08 GMT
  • ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சம்மர் வில்லில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்தில் ஆலன்ரே மெக்குரு என்பவர் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். திடீரென அவர் பட்டாசை கொளுத்தி தலையில் அணிந்து இருந்த தொப்பிக்கு மேல் வைத்தார். இதை பார்த்த பார்வையாளர்கள் அவர் ஏதோ விளையாட்டாக செய்கிறார் என நினைத்தனர்.

அவரது மனைவி பைக்மெக்ரோ இதை தடுக்க முயன்றார். அதற்குள் பட்டாசு வெடித்து சிதறியது. இதில் ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நொடி பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதார். அவர் கூறும் போது, " தலையில் பட்டாசை கொளுத்தும் போது நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவர் குடிபோதையில் இருந்தார். கேட்கவில்லை. அதற்குள் பட்டாசுகள் வெடித்து விட்டன. அவர் நல்ல மனிதர். கடினமாக உழைக்கக் கூடியவர்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

Tags:    

Similar News