உலகம்
என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன் - டோக்கியோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
- ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது என்றார்.
டோக்கியோ:
டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்.
2000 ஆண்டுகளுக்கு முன் வணிகத்திற்காக தமிழர்கள் ஜப்பான் வந்துள்ளனர்.
ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ஜப்பானியர்கள் தமிழைக் கற்க முயற்சிக்கின்றனர்.
ஜப்பானும் தமிழ்நாடும் ஒரே இலக்கிய கட்டமைப்பு கொண்டது.
ஜப்பான் தந்த உற்சாக வரவேற்பில் என்னையே நான் மறந்து போயிருக்கிறேன்.
என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன்.
அயலக தமிழர்களுக்காக பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.