உலகம்
நேபாள அதிபருக்கு கொரோனா- மருத்துவமனையில் சிகிச்சை
- நேபாள அதிபர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார்.
- இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.
காட்மாண்டு:
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (61) திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பித்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர் காஃப்லே கூறியுள்ளார்.