உலகம்

அடுத்த ஆண்டில் மேலும் 3 உளவு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளோம்: வடகொரியா அதிபர்

Published On 2023-12-31 05:26 GMT   |   Update On 2023-12-31 05:26 GMT
  • உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வருகிறது.
  • வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.

பியாங்யாங்:

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் கூறுகையில், 2024-ம் ஆண்டில் மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவுவோம். அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்களை கட்டமைப்போம். மிகப்பெரிய போர் பதிலடி திறன்களை பெறுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எதிரிகளின் எந்த வகையான ஆத்திரமூட்டல் செயல்களையும் அடங்குவதற்கு முழுமையான மற்றும் சரியான ராணுவ தயார் நிலையை பெறவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News