உலகம்
null

மனித சங்கிலி உருவாக்கி நாயை மீட்ட குழுவினர்- வீடியோ வைரல்

Published On 2024-06-15 03:57 GMT   |   Update On 2024-06-15 04:50 GMT
  • மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
  • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயில் சிக்கிய நாயை மீட்பதற்காக பொதுமக்கள் மனித சங்கிலி அமைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பபிடி என்ற பயனரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயின் நடுவே நாய் ஒன்று சிக்கி கொண்ட காட்சி உள்ளது.

அந்த நாயை மீட்பதற்காக ஒரு வாலிபர் கால்வாய்க்குள் இறங்கி வெள்ள நீரில் நடந்து சென்று நாயை மீட்கிறார். ஆனாலும் அந்த கால்வாயில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கால்வாயின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தான வகையில் மனித சங்கிலி அமைத்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து தொங்கியவாறு கால்வாய்க்குள் நின்ற வாலிபரை பிடிக்கிறார்கள்.

பின்னர் மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். இந்த உலகத்தில் இன்னும் சில நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என ஒரு பயனரும், நம்மை விட பெரிய விஷயத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும் போது மனிதர்களால் எதையும் செய்ய முடியும் என மற்றொரு பயனரும் பதிவிட்டனர்.

Full View
Tags:    

Similar News