உலகம்

குடியரசு கட்சி மாநாட்டிற்கு அருகே கத்தி வைத்திருந்த நபரை சுட்டு கொன்ற போலீஸ்

Published On 2024-07-17 09:52 IST   |   Update On 2024-07-17 09:52:00 IST
  • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசித்து வரும் சாமுவேல் ஷார்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் சம்பத்தன்று 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு ஒருவரை தாக்க சென்றதாகவும் பாதுகாப்பு கருதி அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News