உலகம்
ஏசியன் மாநாடு - இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
- ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுவதால் பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.