ஈரானில் திரைப்பட விழாவில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை
- பொது இடத்தில் அவர் ஹிஜாப் அணியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
- 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.
தெக்ரான்:
ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரானில் பிரபல நடிகையான அப்ச ஹென் பாபேகன் என்ற 61 வயது நடிகை ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல் சென்றார். அவர் குல்லா அணிந்து இருந்தார். இது தொடர்பான புகைப் படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது இடத்தில் அவர் ஹிஜாப் அணியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகை அப்சஹென் பாபேகனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளதால் வாரந்தோறும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.