உலகம் (World)

ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்- ஷின்சோ அபே கட்சி அதிக இடங்களில் வெற்றி

Published On 2022-07-11 10:14 GMT   |   Update On 2022-07-11 10:14 GMT
  • ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
  • அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

டோக்கியோ:

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தான் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதால் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது.

மொத்தம் உள்ள 248 இடங்களில் 146 இடங்களுக்கு மேல் அந்த கூட்டணி கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.

சில மணி நேரங்களில் அந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News