உலகம்

தாய்லாந்தில் 12 நண்பர்களை கொன்ற கர்ப்பிணி பெண் கைது

Published On 2023-04-28 07:52 GMT   |   Update On 2023-04-28 07:52 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் கான் வோங்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
  • சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாங்காக்:

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை சேர்ந்தவர் சரத்சிங் சிவுதாபார்ன் (வயது 32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் கான் வோங்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் சாப்பிட்ட உணவில் சயனைடு கலந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரத்சிங் சிவுதாபார்னிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தோழி சிரிபோர்னை சயனைடு கொடுத்து கொன்றது அம்பலமானது. மேலும் 11 நண்பர்களையும் இதே பாணியில் தீர்த்து கட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் சரத்சிங் சிவுதாபார்னை கைது செய்தனர். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

நகை- பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளார். தனது அழகை பயன்படுத்தி 12 ஆண் நண்பர்களை தனது வலையில் விழ வைத்தார். பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார். அடுத்தடுத்து அவர் கொலையை அரங்கேற்றி உள்ளார். போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் வெளியானது.

Tags:    

Similar News