உலகம்

பேசி தீத்துக்கலாம்.. அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து ஈரானிடம் டீல் பேசும் டிரம்ப் - கடிதம் மூலம் தூது

Published On 2025-03-07 19:23 IST   |   Update On 2025-03-07 19:23:00 IST
  • ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது
  • டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். "நீங்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள்(ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நாம் ஏதாவது செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி கட்டமைப்பு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில் டிரம்ப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.

இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News