நூலிழையில் மோதாமல் தப்பிய இரு விமானங்கள்.. மரண பய வீடியோ
- விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது
- அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானமும் தனியார் ஜெட் விமானமும் நூலிழையில் மோதாமல் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் ஜெட் விமானம் புறப்பட்டுக்கொண்டிருந்தது.
மாலை 4:30 மணியளவில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் புறப்பட நகர்ந்து கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் புறப்பட்ட அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.
ஆனால் தக்க சமயத்தில் எச்சரிக்கையுடன் தனியார் ஜெட் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்களும் நெருங்கிய பரபரப்பான தருணத்தின் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கொரியாவில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கோரமான விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.