செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2017-12-28 14:44 IST   |   Update On 2017-12-28 14:44:00 IST
108 திவ்யதேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்று ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை யொட்டி இக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி பகல்பத்து வேங்கட கிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (29-ந்தேதி) நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 11.30 மணிவரை மூலவர் தரிசனம் நடக்கிறது. ஜனவரி 6-ந்தேதிவரை சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.


சொர்க்க வாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் பக்தர்கள் எளிதில் சென்று வர தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ் வசதி, ரெயில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிநடை பெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வசதியும் செய்யப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம், ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Similar News