இந்தியா

கெஜ்ரிவால் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்: ஆம் ஆத்மி

Published On 2025-02-05 21:05 IST   |   Update On 2025-02-05 21:05:00 IST
  • நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.
  • பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.

இந்த முறையில் அதில் வேறுபாடு இருக்காது. சில கருத்து கணிப்பகள் நாங்கள் வெற்றி பெறுவதாக வெளியிட்டுள்ளன. என்றபோதிலும் பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என கூற விரும்புகிறேன். மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார்.

இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News