இந்தியா

டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியீடு

Published On 2025-02-05 19:11 IST   |   Update On 2025-02-05 19:57:00 IST
  • பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • சாணக்யா கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-44 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில், பாஜக 35-40 இடங்களையும், ஆம் ஆத்மி 32-37 இடங்களையும், காங்கிரஸ் 0-1 இடங்களையும் வெல்லும் என்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 51-60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களையும், காங்கிரஸுக்கு 0 இடங்களையும் வெல்லும் என்றும் என்.டி டிவி கருத்து கணிப்பில் பாஜக 35 - 40, ஆம் ஆத்மி 32 - 37, காங்கிரஸ் 0 - 2 தொகுதிகளில் வெல்லும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பிடிக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் டெல்லியில் பாஜக 37-43, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-29 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-49 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 21-31 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் ஜேவிசி கருத்துக்கணிப்பில் பாஜக 39-45 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களையும், காங்கிரஸ் 0-2 இடங்களையும் பெறும் என்றும் சாணக்யா கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-28 இடங்களும், காங்கிரசுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News