செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் 1-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி விழா: இணையதளத்தில் ஒளிபரப்பு

Published On 2020-08-29 09:52 GMT   |   Update On 2020-08-29 09:52 GMT
தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், ராகு பெயர்ச்சியின் போது அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை இணைய தளமான யூடிப்பில் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலமாக போற்றப்படும் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் தனிசன்னதி கொண்டு ராகு பகவான் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார்.

இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபி ஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இந்நிலையில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரி‌ஷப ராசிக்கு வரும் செப்.1-ம் தேதி பகல் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், ராகு பெயர்ச்சியின் போது அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை இணைய தளமான யூடிப்பில் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி லட்சார்ச்சனை தொடங்குகிறது. தொடர்ந்து 31-ம்தேதி நான்கு கால யாகசாலை பூஜை தொடங்கி, செப்.1-ம் தேதி ராகு பெயர்ச்சி நடைபெறுகிறது.

Similar News