புதுச்சேரி
கப்பல் அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல்

கோப்பு படம்.

கப்பல் அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2023-07-10 13:49 IST   |   Update On 2023-07-10 13:49:00 IST
  • போலீசில் புகார் தெரிவித்ததால் ஆத்திரம்
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் துறைமுக ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 29). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

தற்போது 5 மாத விடு முறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடன் வேலை செய்யும் ஊழியர் ஞானேஸ்வரனும் விடுமுறையில் வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோவில் குளத்திற்கு அருகே கவுதம்ராஜ் நின்று கொண்டி ருந்த போது அவரை ஞானேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கையாளும் தடியாலும் தாக்கினர்.

இது சம்பந்தமாக கவுதம்ராஜ் அரியாங்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர். பிறகு கோர்ட்டு மூலம் தினம்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தேரோடும் வீதியில் நின்று கொண்டிருந்த கவுதம்ராஜை ஞானேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், யுனதன் ஆகிய 3 பேர் சேர்ந்து, உன்னை எவ்வளவு அடித்தாலும் போலீசில் புகார் தெரிவித்தாலும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. போலீசில் புகார் தெரிவித்தால் நாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவோம் என கூறி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக மீண்டும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவுதம்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், வசந்தகுமார், யுனதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News