புதுச்சேரி

கோப்பு படம்.

சாய். இளங்கோவன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராக நியமனம்-தலைமைச் செயலர் உத்தரவு

Published On 2023-03-25 10:57 IST   |   Update On 2023-03-25 10:57:00 IST
  • புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.
  • கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இளங்கோவன், ராஜு, கலியபெருமாள், வருவாய்த்துறையில் தாசில்தாராக பணியாற்றி வந்த குமரன் மற்றும் சவுந்தரி ஆகிய 5 பேருக்கும் புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.

பதவி உயர்வு பெற்ற இளங்கோவன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராகவும், ராஜு காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், சமூக நலத்துறை இயக்குனராக பணியாற்றியவரும் குமரன் பதவி உயர்வு பெற்ற நிலையில் அவருக்கு கூடுதலாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராகவும், கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பதவி உயர்வு பெற்ற சவுந்தரி புதுவை மாநில பேரிடர் மேலாண்மை முகமையும் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் இதற்கான ஆணையை தலைமை செயலர் ராஜீவ் வர்மா மேற்பார்வையில் அரசு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News