புதுச்சேரி

மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2023-05-17 14:30 IST   |   Update On 2023-05-17 14:30:00 IST
  • புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
  • இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

சம்பளம் வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்க ளும் போராட்டத்தில் குதித்த னர். தனியார் கல்லூரிக்கு நிகராக ரூ. 51 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். அடுத்தமாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனால் பாதியளவு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. கூட்டுறவுத்துறையில் இருந்து கல்வியியல் கல்லூரியை பிரித்து கல்வித்துறையின் கீழ் இணைக்க வேண்டும்.

பேராசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News