மணக்குள விநாயகர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது எடுத்த காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
அந்நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் அன்பரசன், சுரேஷ் மற்றும் சபரி நாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு குறித்து அனைத்து விபரங்களையும் விளக்கி கூறினர்.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி முதல்வர் மலர்கண் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எம்.ஐ.டி., மற்றும் புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.