புதுச்சேரி

கோப்பு படம்.

சுகாதார ஊழியர்கள் பேட்ஜ் அணிய உத்தரவு

Published On 2023-05-17 14:16 IST   |   Update On 2023-05-17 14:16:00 IST
  • புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் பேட்ஜ் அணியாமல் உள்ளனர்.
  • பணியில் இருக்கும் சுகாதார அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் காண முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர்

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அனைத்து சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் பேட்ஜ் அணியாமல் உள்ளனர்.

இதனால் பணியில் இருக்கும் சுகாதார அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் காண முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர்.

எனவே சுகாதாரத்துறையின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளூர் மொழி, ஆங்கிலத்தில் பெயர், பதவி அடங்கிய பேட்ஜை வழங்க சுகாதாரத்துறை அலுவலக தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் தவறாமல் பெயர் பேட்ஜ்கள் தெரியும் வகையில் அணிந்திருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை ஜூன் 15-ந் தேதிக்கு முன்பாக சுகாதா ரத்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News