ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் நினைவுதினம்
- கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காலை 9 மணிக்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைமை அலுவலகத்தில் திருவுருவ படத்திற்கு புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமையில், அகில இந்திய துணைத் தலைவரும், கேரள மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவருமான சந்திரசேகரன் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் பலர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் 12.30 மணிக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரில் ரவிச்சந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்து.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். 12.40 மணிக்கு உழவர்கரை நகராட்சி எதிரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு மூலக்குளம், சாலைத் தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிகளில் ஐ.என்.டி.யூ.சி மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.