சாராயம், கள்ளுக்கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும்
- அன்பழகன் யோசனை
- மெத்தனாலை அதிக தண்ணீர் கலந்து எரிசாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை கலால்துறை பாராமுகமாக செயல்பட்டு வந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் தொழிற்சாலை களுக்கு பயன்படு த்தக்கூடிய மெத்தனாலை புதுவையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் மரண மடைந்தனர். அ.தி.மு.க ஏற்கனவே அளித்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தல் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்சி, சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக மெத்தனாலை பயன்படுத்தும் பல தொழிற்சாலைகள் தற்போது இயங்கவில்லை.
பல மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட மெத்தனாலை அதிக தண்ணீர் கலந்து எரிசாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளச்சாரா யத்தால் தமிழகத்தில் உயிரிழ ந்தவர்கள் விவகாரத்தில் புதுவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். கள்ளச்சாராயம் தொடர்பாக கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ், வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
புதுவை மாநிலத்தில் கள்ளுக்கடை, சாராயக் கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி தமிழக தி.மு.க அரசை கண்டித்து போராட்டம் நடத்த முன்வருவாரா?
இவ்வாறு அன்பழகன் கூறினார்.