புதுச்சேரி
மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
- நெட்டப்பாக்கம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாத பெருமான் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
- முன்னதாக காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
புதுச்சேரி:-
நெட்டப்பாக்கம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாத பெருமான் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், பூணுல் போடும் வைபவம், கும்ப பூஜைகள், யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சொக்கநாதரும், மீனாட்சியும் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழுங்க திருக்கல்யாணம் சிறப்பான முறையில் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், தேவார பாராயண குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.