புதுச்சேரி

கோப்பு படம்.

எம்.எல்.ஏ. டிரைவர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு

Published On 2023-05-18 11:15 IST   |   Update On 2023-05-18 11:15:00 IST
  • தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
  • முகநூலில் நமச்சந்திரசேகர் குறித்து அவதூறான தகவலை ஆரதாடிபோச்சையா பதிவு செய்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தின் கனகலபெட்டா கேனா வீதியை சேர்ந்தவர் நமச்சந்திரசேகர். ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கின் டிரைவர். இவர் கடந்த 8-ம் தேதி ஏனாம் கடற்கரையில் நண்பர் நாகேஷ்வர ராவுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த ஏனாம் பிராந்திய தி.மு.க.தலைவர் ஆரதாடி போச்சையா, நமசந்திரசேகரை ழுத்து ரூ. 50 ஆயிரம் வேண்டும். இல்லாவிட்டால், உனக்கும், வேறு நபருக்கும் நடந்த தகராறு குறித்து சமூகவலைதளத்தில் தவறாக பதிவிடுவேன் என மிரட்டினார்.

இதை நமச்சந்திரசேகர் பொருட்படுத்தவில்லை. கடந்த 12-ம் தேதி முகநூலில் நமச்சந்திரசேகர் குறித்து அவதூறான தகவலை ஆரதாடிபோச்சையா பதிவு செய்தார்.

இதுகுறித்து நமச்சந்திரசேகர் புகாரின்பேரில் ஏனாம் போலீசார் தி.மு.க நிர்வாகி மீது மிரட்டல், அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News