விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தேசிய மருத்துவ உதவியாளர் வார விழா
- சென்னை மிருதன் மெடிக்கல் டெக்னாலஜி சி.ஜி.ஓ. வெங்கடேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
- மருத்துவ உதவியாளர் துறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தேசிய மருத்துவர் உதவியாளர் துறை வார விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சிக்கு அலைடு ஹெல்த் கல்லூரியின், புதுச்சேரி பிரிவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார்
இக்கருத்தரங்கில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை ஆலோசகர் டாக்டர் பத்ரி நாராயணன், கல்லீரல் இயல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் மகேந்திரன் புதுவை அரசு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவ ஆலோசகர் சிவராம கிருஷ்ணன், சென்னை மிருதன் மெடிக்கல் டெக்னாலஜி சி.ஜி.ஓ. வெங்கடேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து.
கல்லுரி வளாகத்தில் சுகாதார அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. முடிவில் மருத்துவ உதவியாளர் துறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந்துரு தலைமையில் செய்து இருந்தனர்.