புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 13:55 IST   |   Update On 2023-07-25 13:55:00 IST
  • சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரி

மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான நேரு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சடகோபன், பஷீர்அகமது, பிராங்களின் பிரான்சுவா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News