மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.60 கோடி நிதி - முதல் அமைச்சர் ரங்கசாமி தகவல்
- கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது.
- இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. புதுவையில் பல ஆண்டாக பணிகள் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர்.
குறைகள் களையப்பட்டு திட்டம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார். இதன்படி இந்த ஆண்டு 41 லட்சம் மனித நாட்கள் வேலையை ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
வனத்துறை ஒத்துழைப்புடன் நாற்றுப்ப ண்ணைகள் அமைத்தல், காடு வளர்ப்பு உட்பட பல திட்டங்களில் வேலை நடக்க உள்ளது. தொண்டமாநத்தத்தில் நாற்று பண்ணை திட்ட விழாவில் விதைகளை தூவி திட்டத்தை முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திதர பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். நமது அரசு பொறுப்பே ற்றவுடன் அதிக நாட்கள் வேலைதர முடிவு செய்தோம். ரூ.20 கோடியாக இருந்த நிதியை ரூ.100 கோடியாக அமைச்சர் பெற்று வந்துள்ளார்.
இதனால் ஆண்டுக்கு 100 நாள் வேலை தர முடியும். இதேபோல் சாலை பணிக்கான நிதியும் முழுமையாக செலவிட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தினால் அதற்கான நிதியை பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை. நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் முடங்கிப்போனது. நமது ஆட்சி வந்தவுடன் நலத்திட்டங்கள், அறிவித்தபடி முதியோர் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது.
27 ஆயிரம் பேருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கியுள்ளோம். அனைவருக்கும் 10-ந் தேதிக்குள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விட்டோம். சீருடை வழங்கி வருகிறோம். லேப்டாப் வழங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது. விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.