- 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
- தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான புதுக்குப்பம் மஞ்சனீஸ்வரர் கோவில் குளத்தை ரூ.3.76 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தும் பணி, ஆண்டியார் பாளையம் பகுதியில் உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை ரூ.5.74 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரெட்டை குட்டை வாய்க்காலை ரூ.3.91 லட்சம் மதிப்பில் தூர் வாரி ஆழப்படுத்தும் பணி மற்றும் டி.என் பாளையம் பகுதியில் நாகப்பனுர் முதல் இரிசன் கோவில் வரை உள்ள மலட்டாறு கரையை ரூ.28.80 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி என மொத்தம் 42.21 லட்சம் மதிப்பிலான 100 நாட்கள் வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி, ஐ.எப்.எஸ். செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமரன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், புதுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஆண்டியார்பாளையம் பகுதி ஞானசேகரன், வாழுமுனி செந்தில், மதி, டி.என் பாளையம் பகுதி என்.ஆர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன், தர்மன், வீரபாலன், சிவா முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.