புதுச்சேரி

சாரதா கங்காதரன் கல்லூரிக்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. விருது வழங்கிய காட்சி.

சாரதா கங்காதரன் கல்லூரிக்கு மாநில விருது

Published On 2023-10-12 13:39 IST   |   Update On 2023-10-12 13:39:00 IST
  • மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது
  • கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 49-வது நாட்டு நலப்பணித்திட்ட ஆண்டு விழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் கல்வித்துறை அமை ச்சர் நமச்சிவாயம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வல மாணவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார். இதில் வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மரிய செல்வத்துக்கு மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்கள் பிரேம்குமார், கிஷாத் ஆகியோருக்கு மாநில அளவிலான சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News